மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


விளையாட்டு உபகரணத்திற்குள் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருள் பறிமுதல்!!

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஸ்பெய்ன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் எனும் போதைபொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

நேற்று (17) பிற்பகல் கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் வைத்து இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார். 

குறித்த போதைபொருள் கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கு ஸ்பெய்ன் நாட்டில் உள்ள நண்பர் ஒருவரால் அனுப்பட்டிந்த நீர்ச்சருக்கு பலகை (Sketeboard) மற்றும் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்குள் இந்த ஹஷீஸ் எனும் போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றில் 14 இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ 400 கிராம் ஹஷீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

இந்த விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொள்ள குறித்த ஊடகவியலாளர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வருகை தந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.