மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


6 அமைச்சர்கள் குறித்து மஹிந்தவின் எதிர்வுகூறல்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.