மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மே 7ஆம் திகதி தனியார் துறையினருக்கு விடுமுறை இல்லை?

மே மாதம் ஏழாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தனியார் துறையினருக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ விமலவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

வெசாக் வாரத்தினை முன்னிட்டு, தொழிலாளர் தினத்தை 7ஆம் திகதி கொண்டாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மே 7ஆம் திகதி தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும், மே மாதம் 7ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.


No comments

Powered by Blogger.