மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


புலிகளை பயங்கரவாத அமைப்பாக மீண்டும் பட்டியலிட்ட ஐரோப்பிய ஒன்றியம்!


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்புபட்டியலில் சேர்த்துள்ளது.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் 20அமைப்புக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், ஆகியோரின் இராஜதந்திரமுயற்சிகளின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பியஒன்றியம் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின்பயங்கரவாத பட்டியலில் முதல் முறையாக இணைக்கப்பட்டது

No comments

Powered by Blogger.