மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


யாழ். பருத்தித்துறையில் பதற்றம்! இரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்..


யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உயிரிழந்தவரின் தாயாரான நல்லதம்பி - இராசம்மா (வயது 75) பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நல்லதம்பி - ரேவதி (57 வயது) எனவும் திருமணம் செய்யாதவர் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திக் கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.