புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு நிலையத்தினை முழுமையாக பயன்படுத்த மண்முனைப்பற்று புதிய தவிசாளர் நடவடிக்கை!!

                                                                                          - செ.துஜியந்தன் -
புதுக்குடியிருப்பு திண்ணமக் கழிவு நிலையத்தினை முழுமையாக பயன்படுத்த மண்முனைப்பற்று புதிய தவிசாளர்சோ.மகேந்திரலிங்கம் நடவடிக்கை மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோ..மகேந்திரலிங்கம் புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ சேகரிப்பு நிலையத்திற்கு சென்று அந் நிலையத்தின் பரப்பை விஸ்தரிக்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு திண்மக் கழிவு முகாமைத்தவ நிலையம் நான்கு அரை ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும் இது கடந்த காலங்களில் முழுமையாக பயன்படுதாது இருந்துள்ளது. இதனை அறிந்த புதிய தவிசாளர் தனது முதலாவது திட்டமாக இந்நிலையத்தின் பரப்பை விஸ்தரித்து குப்பைகூளங்களை முறையாக சேகரிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுச்சுகாதார பரிசோதகர் கே.இளங்கோ மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் சகிதம் விஜயம் செய்த தவிசாளர். அங்குள்ள பற்றைக்காடுகளை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணியினை துரிதப்படுத்தியுள்ளதுடன் அந் நிலையத்தினை முழுமையாகப் பயன்படுத்துமாறு ஊழியர்களிடம் உத்தரவு இட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.