இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டது!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெறாது, பிரிதொரு தினத்தில் நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், தேர்தல் நடாத்தும் குழுவில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால மே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.