கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு


புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளோர் கடமைகளுக்குத் திரும்ப வசதியாக இன்றைய தினமும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த நாட்களில் போன்றே இன்றும் இணைந்த புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இன்றைய தினத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் 5,400 விசேட பேருந்து சேவைகள் கொழும்பிற்கு வரும் பயணிகளின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக அதிவேகப் பாதைகளிலும் 122 விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதே நேரம் புகையிரத திணைக்களமும் பண்டாரவளை, மாத்தறை, ஆகிய இடங்களில் இருந்து கொழும்பிற்கும், கொழும்பில் இருந்து காலிக்கும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனியார் பேருந்துகளும் தொடர்ந்தும் புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.