மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

செ.துஜியந்தன்

கிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடிக்கிராமத்திற்கும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்கும் இடைப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான கிண்ணையடிக் கிராமம் மற்றும் முருக்கன்தீவு கிராமம் ஆகியவற்றை இணைக்கும் துறையடிக்கு பாலம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்துவருகின்றனர். இக் கிராமங்களுக்கு இடைப்பட்ட 200 மீற்றர் தூரம் உள்ள ஆற்றினை மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தோணி மூலமே பிரதேச மக்கள் கடந்து வருகின்றனர். கிண்ணையடிக் கிராமத்திற்கு அப்பால் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாளாவெளி ஆகியவற்றிலுள்ள கிராம மக்களும் மாணவர்களும் இவ் ஆற்றினைக் கடந்தே தினமும் பயணம் செய்துவருகின்றனர். சில நேரங்களில் இவ் ஆற்றில் தோணி கவிழ்ந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கிண்ணையடியில் இருந்து செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கூட மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்பகுதிக்கு கடந்தவருடம் பாலம் அமைக்கப்படும் என கூறப்பட்டபோதிலும் இதுவரை பாலம் அமைக்கப்படாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


No comments

Powered by Blogger.