வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!!

கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக் கொண்டதாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதேநேரம் நிரந்தர பணியாளர்கள் அன்றைய தினத்திற்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் கட்டாயமாக எதிர்வரும் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post