துறை நீலாவணைக் கிராமத்தின் குறைபாடுகள்!!

                                                                                 - க.விஜயரெத்தினம் - 
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பொதுச்சுகாதார மருத்துவமாது அலுவலக வேலிகள் சிதைவடைந்து,வளாகம் பற்றைக்காடுகளுடன் கட்டாக்காலிகளின் உறைவிடமாக காணப்படுகின்றது என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றார்கள்.

கிராமத்தில் உள்ள நான்கு வட்டாரங்களையும் சேர்ந்த 4500 குடுபத்தில் உள்ள 11000 பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள்,குழந்தைகள் இச்சேவை நிலையத்தின் மூலம் சுகாதார நன்மைகளை பெற்று வருகின்றார்கள்.இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கும் அத்தியாவசியமான சேவைகளில் சுகாதாரசேவை முதன்மையானது.இவ்வாறு முதன்மையானதாக இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார சேவை நிலையங்களில் இவ்வாறான பௌதீக குறைபாடுகள் தமிழ் பகுதிகளில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.நாளாந்தம். கடமைக்கு வரும் மருத்துவமாது உத்தியோகஸ்தர், பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர்கள் இச்சேவை நிலையத்தின் குறைபாடுகளையோ அல்லது நிலையத்தின் இன்றையத் தோற்றத்தையோ கண்டுகொள்ளாமல் ஏன் இருக்கின்றார்கள் ? என துறைநீலாவணை பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இச்சேவை நிலையத்தின் குறைபாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர்,சுகாதார அமைச்சின் செயலாளர் நிறைவேற்றிக் கொடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறைநீலாவணை பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றார்கள்.

No comments

Powered by Blogger.