மட்டு- யானை,குரங்கு போன்ற விலங்குகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கை!

                                                                                   -க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினாலும்,குரங்குகளினாலும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் தொல்லையினாலும்,அழிவுகளினாலும் பாதுகாப்பதற்கு வலு ஆதார அபிவிருத்தி அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் திட்டங்கள் முன்மொழியப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்புமாவட்டத்தில்யானைகளினாலும்,குரங்குகளினாலும் ஏற்படுத்தப்படும் தொல்லைக கிலிருந்தும்,அழிவுகளிலிருந்தும் பாதுகாப்பது சம்பந்தமான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் இன்று(28.4.2018)காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வலு ஆதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஸ்ரீநேசன்,எஸ்.வியாளேந்திரன்,அலிஸாஹிர் மௌலானா,பிரதேச செயலாளர்கள்,வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோஸ்தர்கள்,ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள்,தீர்மானங்கள் முன்வைத்தார்கள்.

இதன்போது வாழைச்சேனை,ஓட்டமாவடி,கோரளைப்பற்று போன்ற பிரதேசங்களில் பொதுமக்களுக்கு தொல்லைகொடுக்கும் குரங்குகளை அங்கிருந்து குரங்குகளை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் கோரிக்கை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட வலு ஆதார வனஜீவராசிகள் அமைச்சர் உடனடியாக குரங்குகளை அகற்றி குரங்குத்தொல்லையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்குமாறு பிரதேச வன ஜீவராசிகள் உத்தியோகஸ்தருக்கு ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கினார்.2015 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் பொதுமக்கள் தாக்கப்பட்டு மரணித்தும், அவர்களின் உடமைகளையும்,இருப்பிடங்களையும்,பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.இதனை வலு ஆதார வனஜீவராசிகள் அமைச்சு எங்களின் குறைபாடுகளை 10 வீதமாவது இதுவரையும் நிறைவேற்றித் தரவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அமைச்சரின் கவனத்திற்கு எட்டிவைத்தார்.இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் எதிர்வரும் காலங்களில் உங்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றித் தருவதாக இணக்கம் தெரிவித்தார்.வாகரை, தாந்தாமலை,புல்லுமலை போன்ற பிரதேசங்களில் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அனுமதியுடன் குறித்த இடங்களில் உப அலுவலங்கள் அமைக்க வேண்டுமென அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.யானைவேலி, யானைவெடி என்பது கவனம் செலுத்தப்பட்டது.2012ஆண்டு மாவட்டத்தில் மீளக்குடியேறிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட வேலியை மீளப்பெற்று மீள்குடியேறிய இடங்களுக்கு வெளிய அமைக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளை பணித்தார்.

No comments

Powered by Blogger.