மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் போதைப்பொருள்,புகையிலை தவிர்ப்பு ஊர்வலம்!!

                                  - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பரிபாலனத்தின் நேரடியான கண்காணிப்பில் இயங்கும் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் "போதைப்பொருள் ,புகையிலை தவிர்ப்பு ஊர்வலம்" எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை (3.4.2018)காலை 9.00 மணியளவில் அதிபர் எம்.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்கு இணங்க பாடசாலைதோறும் பேண்தகு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து சிறப்பான பாடசாலையாக மாற்றியமைக்க வேண்டும்.இதற்கிணங்க மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களுடன் நடைபெற்றது.

மட்டக்களப்பு "விழித்தெழு" அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்தின் உத்தியோகஸ்தர்களான எஸ்.அன்புராசா,எம்.ஜயவர்த்தன மற்றும் பிரதியதிபர் ஆசிரியர்கள்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்,கிராம சேவையாளர்கள்,சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

பாடசாலையில் இருந்து புறப்பட்ட போதைப்பொருள்,புகையிலை தவிர்ப்பு ஊர்வலம் பிரதான வீதியை அடைந்து மீண்டும் பிள்ளையாரடி வரை சென்று அங்கிருந்து கொக்குவில் ,சத்துருக்கொண்டான் கிராமத்தின் ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.500 மேற்பட்ட மாணவர்கள் சுலோக அட்டையைத் தாங்கிச் சென்றார்கள்.

இதன்போது "விழித்தெழு புகைத்தலை நிறுத்து", "குடும்பத்தை சீரழிக்கும் சிகரட் குடியை நிறுத்து" ,"குடிபோதை குடும்பத்தை சீரழிக்கும்" ,சாராயக்கடையை திறந்து சாவுக்கு துணைபோகாதே" ,"வன்முறையை தூண்டும் புகைத்தல்,மது,போதை வேண்டாம்" "புகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும் ,உயிரைக் கொல்லும்" "சிந்தித்து செயற்படு சீரழிவு எதற்கு...?" புகைக்கும் பணத்தை கல்விக்கு செலவிடுங்கள்" எனும் வாசகம் அடங்கிய சுலோக அட்டையைச் மாணவர்கள் ஊர்வலத்தில் தாங்கிச் சென்றும்,துண்டுப்பிரசுரங்களை பாதசாரிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கிச்சென்றார்கள்.
Powered by Blogger.