வெல்லாவெளி போரதீவுப் பற்று பிரதேச சபை தவிசாளராக திரு யோ.ரஜனி!!!

போரதீவுப்பற்று பிரதேசசபை முதல் அமர்வு இன்று(03) பிற்பகல் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் ஆரம்பமானது.

பாலையடிவட்டை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகநாதன் ரஜனி தவிசாளராகவும் பிரதிதவிசாளராக தும்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாராயணபிள்ளை தர்மலிங்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர் இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி 03 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும். தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு 01 உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரும், மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை குழு 02ன் இரு உறுப்பினர்களுமாக மொத்தம் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் முக்கிய அம்சமாக தவிசாளரைத் தெரிவு செய்ய திறந்த வாக்கெடுப்பு கோரியதற்கு இணங்க திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. தவிசாளருக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோகநாதன் ரஜனி, சுயேட்சை குழு 2ல் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரான வி.ஆயுஷ்மன் ஆகியோருக்கு இடையில் நிலவிய போட்டியில் ரஜனிக்கு 09 உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராக எட்டு உறுப்பினர்களும் நடுநிலையாக ஒருவரும் வாக்களித்தார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post