மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இன்று (16) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் பதவிக்காக, இதன்போது, சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சு.ஜெகதீஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கூடிய வாக்குகளைப் பெற்று ஆசிர்வாதம் அந்தோணி தவிசாளராக தெரிவு செய்யபட்டார்.

இதேவேளை, உப தலைவருக்கான போட்டியில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நவரட்ணம் சிவாயினி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி,அருள்கரனும் போட்டி இட்டனர்.

இதில் சிவாயினிக்கு 7 வாக்குகளும் அருள்கரனுக்கு 6 வாக்குகளும் கிடைத்த நிலையில் ந.சிவாயினி உபதலைவராக தெரிவு செய்யபட்டார் .

No comments

Powered by Blogger.