வெல்லாவெளியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் நாளை!!

                                                                                  - க.விஜயரெத்தினம் -
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் நாளை(1.5.2018) வெல்லாவெளியில் பிற்பகல் 2.00 மணியளவில் வெல்லாவெளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தொழிற்சங்க மேதினக்கூட்டமானது போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோகநாதன்-ரஜனி தலைமையில் நடைபெறவுள்ளது.இதன்போது தொழிற்சங்க மேதின ஊர்வலம்,தொழிற்சங்க தீர்மானங்கள்,பேச்சுக்கள்,கொள்கைபரப்பு பிரகடனங்கள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற முதல்வர்,பிரதி முதல்வர்,தவிசாளர்கள்,பிரதித்தவிசாளர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,உட்பட பொதுமக்கள்,கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.