இரண்டாக பிளவுப்பட்ட ஜே.வி.பி?

மக்கள் விடுதலை முன்னணி அனுரகுமார அணி மற்றும் லால்காந்த அணி என இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதியான பாடகர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதிபலனாக அந்த கட்சிக்குள் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க அணி பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

லால் காந்த அணி அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாகவும் மதுமாதவ அரவிந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.