யானை வேலிக்கென அறவிடப்படும் விவசாயிகளின் பணம் தொடர்பில் தெளிவின்மை! மக்கள் விசனம்!!

போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் யானைக்கான பாதுகாப்பு வேலி அமைப்பதற்கென விவசாயிகளிடம் தனிப்பட்ட ரீதியில் பதிவிலக்கமிடப்படாத பற்றுச் சீட்டு வினியோகித்து ஒரு ஏக்கருக்கு ரூபாய் 250 படி அறவிடப்படுவதாகவும் இதனால் விவசாயிகளினிடையே தெளிவற்ற நிலை நிலவுவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.


இந்த விடயம் பற்றி வெல்லாவெளிப் பிரதேச எல்லையோர பகுதி விவசாயிகளிடம் வினவியபோது அவர்களின் கருத்தினை இங்கே பதிவிடுகிறோம்.

"நாங்கள் மழையின்மை சரியான கால நிலையின்மை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வேளான்மை செய்கையினை மேற்கொண்டு வருகிறோம் இந்த நிலையில் தற்போது வெல்லாவெளி பிரதேச செயலாளரின் பணிப்பின் பேரில் ஏக்கருக்கு  பற்றுச் சீட்டொன்றினை வழங்கி ரூபாய் 250 படி ஒவ்வொரு எல்லைக்கிராம விவசாயிகளிடமும் அறவிடுகிறார்கள் அதே வேளை இவ்வாறு பணம் வழங்காதவர்களிடம் அந்தந்த கிராமத்து வட்டைவிதானைமார் மற்றும் விவசாய அமைப்புக்கள் கூறுவது என்னவென்றால் மானியப் பசளை வினியோகம் குறிப்பிட்ட பற்றுச் சீட்டினை பணம் செலுத்தி பெறாதவிடத்து பசளை வழங்கப்படாது எனவும் கூறுகிறார்கள்"

இன்னொரு விவசாயிடம் வினவியபோது....
பிரதேச செயலாளரின் பணிப்புரையின் பேரில் இவ்வாறான விடயமொன்று இடம்பெறுகிறது என்றால் அது நன்மை பயக்கும் ஒரு விடயம்தான் இது சம்பந்தமாக விவசாயிகளான எங்களுக்கு என்ன காரணத்தினால் எதற்காக இந்தப் பணம் அறவிடப்படுகிறது எவ்வாறு இது யானை வேலியினை அமைப்பதற்கு பயன்படப் போகிறது யானை வேலி அமைப்பதற்கு இது முழுமையாக போய் சேருமா? இதை எந்தக் குழு மூலம் அறவிடப் போகிறோம் ஏன் அரசாங்கத்தால் பணம் ஒதுக்க முடியவில்லை போன்ற வினாக்களுக்கான சரியான தெளிவான பதிலொன்று தேவை இவ்வாறான செயற்பாடு ஒரு குழப்ப நிலை ஏற்படுத்துவதாக உணர்கிறோம் அதுமட்டுமல்ல ஒவ்வொரு கிராமத்துக்கென பற்றுச் சீட்டு வழங்கப்படுகிறது ஆனால் பதிவு செய்யப்படாத தலைவர் செயலாளர் பொருளாளர் யார் என்றே தெரியாத அறிவிக்கப்டாத ஒவ்வொரு கிராமத்துக்கும் வெவ்வேறு பொருளாளரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன இதற்கான முறையான ஒரு அறிவிப்பு கண்டிப்பாக தேவை.

என பிரதேசத்துக்குரிய விவசாயிகள் தெரிவித்தனர்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்தில் ஏற்று விவசாயிகளுக்குள் நிலவும் இந்த குழப்ப நிலையினை தீர்த்து சரியான தெளிவினை வழங்க முன்வர வேண்டும்.

No comments

Powered by Blogger.