பட்டிருப்பு சித்திவிநாயகர் மஹோற்சவ விழா இடம்பெறவுள்ளது!!

                                                                                    - க.விஜரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கிராமத்திலிருந்து வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மஹோற்சவ பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17.4.2018) திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ச்சியாக பத்துநாட்கள் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றும்,வசந்த மண்டபபூசை,புஸ்பாஞ்சலி,வேத பாராயணம், தீப பூசை,மாம்பழத்திருவிழா,திருவேட்டை திருவிழா,சங்காபிஷேகம்,பூங்காவனத்திருவிழா,பாற்குடபவனி போன்ற நிகழ்வுகளுடன் எதிர்வரும் 31.4.2018 தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவவிழா இனிது நிறைவுபெறவுள்ளது.

வருடாந்த மஹோற்சவ திருவிழா கிரியாஜோதி சிவஸ்ரீ இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post