இலங்கையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய அமானுஷ்யம்! உண்மையாக நடந்த திகில் சம்பவம்


இலங்கையில் நடந்த திகில் சம்பவம் ஒன்று தொடர்பில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபல சிங்கள பாடகர் திமங்க வெல்லாலகேவை அமானுஷ்ய சக்தி ஒன்று அச்சுறுத்தியமையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

“யாருக்கும் தெரியாத இரகசியம் ஒன்றை தான் நான் இன்று கூறிகின்றேன். எனினும் இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகும். இந்த சம்பவத்தின் பின்னரே அமானுஷ்யங்கள் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நான் பாடகராக பிரபல்யமடைந்தவுடன் கொழும்பிற்கு வர நேரிட்டது. பிலியந்தலை பிரதேசத்தில் வாடகை அறையில் வசித்து வந்தேன். அங்கு தான் அமானுஷ்ய சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்தேன்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நான் வசித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்தனர். நான் மட்டுமே அன்று வீட்டில் இருந்தேன். அது பாழடைந்த இடத்தில் இருந்த ஒரு வீடல்ல. எனினும் அன்றைய தினம் வீடு பாழடைந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளது. எனினும் ஏன் இப்படி என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்றைய தினம் இரவு நேரமானவுடன் மின்விளக்குகளை அனைத்து விட்டு உறங்க சென்றேன். சற்று நித்திரை வந்தவுடன் கறுப்பு நிறத்தில் உருவம் ஒன்று என்னை நோக்கி வந்ததனை அவதானித்தேன். வந்த உருவம் எனக்கு தெளிவாக தெரியவில்லை. அவ்வாறு வந்த உருவம் எனது கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டது. நான் சத்தமாக கூச்சலிட்டேன். இது கனவு இல்லை. நான் எவ்வளவு சத்தமாக கூச்சலிட்ட போதிலும் வெளியே சத்தம் வரவில்லை.

அதன் பின்னர் இரண்டு மூன்று நாட்கள் என்னால் பேசமுடியாமல் போனது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு சென்றுவிட்டேன்.. ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.