தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு!!


1990களில் நடந்த ஆயுத பேரம் தொடர்பாகதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

75 வயதான ஜுமா வெள்ளிக்கிழமையன்று டர்பனிலுள்ள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜுமா மீது ஊழல், பயமுறுத்தி பணம் பறித்தல், மோசடி மற்றும் பணமோசடி போன்ற 16 விதமான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

ஜுமாவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நகரத்தில் பேரணியை நடத்திய நிலையில், நீதிமன்றம் வழக்கை தாமதமாக விசாரிப்பதாக அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தனது சொந்த பிராந்தியத்தில் நடந்த வழக்கு விசாரணையை முடித்துவிட்டு வந்த ஜுமா, வெளியே திரண்டிருந்த தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

"குற்றம் இழைத்ததாக ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டு, அது கைவிடப்பட்ட பின்னர், பல வருடங்களுக்குப் பிறகு அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரிக்கப்படுவதை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. இது ஒரு அரசியல் சதி" என்று ஜுலு மொழியில் ஆற்றிய தனது உரையில் ஜுமா கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post