கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!!

                                                                                           - செ.துஜியந்தன் -
தற்போது வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் பல
கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளை நோக்கி படையெடுக்கத்
தொடங்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளம் கிரமத்திலுள்ள ஆற்றுப்பகுதிகளை அண்டிய காடுகளில் உள்ள மரங்களில் பல வெளிநாட்டுப் பறவை இனங்கள் வந்து தங்கியுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலும் அதிகமான பறவை இனங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தியா, அவுஸ்திரெலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பறவை இனங்களை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. மார்ச், ஏப்பரல் மாதங்களில் இங்கு வரும் பறவைகள் ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் தம் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிவிடுகின்றமை வழமையான விடயமாக இருக்கின்றது. இப் பறவைகளை உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.