மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


குருமண்வெளியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!!

                                                                                            - செ.துஜியந்தன் -
குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் நேற்று டெங்கு ஒழிப்பு சிரமதானம் அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதி அதிபர் கு.பிரபாகரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதுடன். பாடசாலை வளாகத்தினுள்ள கிணறுகள் சுத்தப்படுத்தப்பட்டு டெங்கு குடம்பிகளை அழிக்கும் மீன் குஞ்சுகளும் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.