இருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு!!

                                                                                    - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை(10.4.2018) இரவு தாலிக்கொடி,நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு திருடப்பட்ட நகைகளின் பெறுமதி பன்னிரண்டு (12 இலட்சம்)இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதி ,ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள ஆசிரியர் திருமதி எழிலரசி நவநீதன் அவர்களின் வீட்டை உடைத்து 21 ½ பவுன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

குறித்த வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன் நுவரேலியா சென்று நேற்றிரவு வீடு திரும்பிய வேளையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டுக்கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவரை பொலிசார் ரகசியமாக விசாரணைகளை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.