ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!!


சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 இடத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது இலங்கை இதில் 131 இடத்தில் இடம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் சுவிட்ஸ்லாந்தும் இடம் பெற்றுள்ளது. 

அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திர நிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன. 

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலயத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 17 நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சல் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகள் இந்த வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலயத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிரேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 64 நாடுகள் இடம் பெற்றுள்ளன.​

சிவப்பு வலயத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கருப்பு வலயத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.