அறிவையும் பண்பாட்டையும் கொண்ட மனிதவளமே நாட்டுக்குத் தேவை!

அறிவையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மனிதவளம் நாட்டுக்குத்தேவை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இன்று (06) முற்பகல் கண்டி திரித்துவக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இன்றுள்ள மோசமான சமூக சூழ்நிலையில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

அறிவையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மனித வளத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு அனைத்து வகையான அர்ப்பணிப்பையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.