கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

கண்டி - தெல்தெனிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி எனப்படும் மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அனைவரையும் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.