தமிழர் விடுதலைக்காக தியாகியாக பிரகாசித்த திலீபனின் நினைவிடம் புனரமைப்பு!!

தமிழீழவிடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவிடம் நேற்றைய தினம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்கபணிகள் யாழ்மாநகரசபையினால் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மாநகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ்த்தேசியகூட்டமைப்பினரால் நிறுவப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் அவர்களது முதலாவது உத்தியோகபூர்வவேலைத்திட்டமாக இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மானிடவிடுதலையை நேசித்து இம்மண்ணில் உறங்கிக்கொண்டிருக்கும் மாவீரம் என்றுமே தமிழ் மக்களால் மறக்கப்படமாட்டாது.

No comments

Powered by Blogger.