மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


நக்கல்ஸ் மலைத்தொடரில் மாயமான இளைஞர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்.!

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு தொலைத் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமல் போயிருந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்த ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 இளைஞகள் என தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்கள் நேற்று காலை 11 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.