மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தேற்றாத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி ஏழு பேர் படுகாயம்!!

                                             - செ.துஜியந்தன் - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வேனும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது வேன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வேனில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

படுகாயங்களுக்குள்ளான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அ.நிசாந்தன், (24வயது),ஓந்தாட்சிமடத்தைச்சேர்ந்த.சந்திரன்சேகரன்(28வயது),கோழிஏற்றிவந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த கல்முனைக்குடியைச்சேர்ந்த அக்பர்பவாதீர்(20வயது), எம்.கபீத்(25வயது), இதிகாஸ்றியால் ஆகியோர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவத்தில் 30 வயதைத்தாண்டாத இளைஞர்களே சிக்கிக்கொண்டுள்ளனர். 
பொலன்னறுவையில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி வந்த டிப்பர் வாகனம் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் மீது மோதியுள்ளது. 

இதன்போது டிப்பரில் மோதுண்ட வேன் மின்கம்பதிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36வீட்டுத்திட்டத்தை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.