இந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா? எமது சமூகம்!!

நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ...! இந்தக் கூற்றுக்கு அமைவாக பல திறமை மிக்க கலைஞர்களை அவர்களை சார்ந்த சமூகமோ அமைப்புக்களோ ஏன் அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை என்பது மிக வேதனையான விடயமே!

அந்த வகையில் மட்டக்களப்பு மகிழூர் கிராமத்தில் வசித்து வரும் இளம் சித்திரக் கலைஞர் சிறந்த ஹைக்கூவாளர் கவிதைகள் புனைவதில் வல்லமை பொருந்தியவர்தான் திரு.பற்மராஜன் சுருக்கமாக தன்னை முக நூலில் பா.தா என்றே அறிமுகப் படுத்தியுள்ளார் இதுவே அவரது புனை பெயரும் கூட இந்த பன்முக திறமை கொண்ட இக் கலைஞன் கடந்த பல காலங்களாக இந்தத் துறையில் மிக அர்ப்பணிப்போடும் ஈடுபாட்டோடும் செயல்படுவதனை அவரது இந்த ஓவியங்களே சாட்சி.

மண்ணின் பெருமை சமூகத்தின் வரலாறுகள் என பல கோணத்தில் இவரது ஓவியங்கள் காணப்படுகின்றன அது மட்டுமல்ல பண்டைய காலங்களில் அரசர்கள் தங்கள் உருவங்களை ஓவியங்களாக வரையக் கேட்டு பத்திரப்படுத்தி வந்தார்கள் அவையே இன்று எல்லோரா சித்தன்னவாசல் சீகிரியா போன்ற குகை ஓவியங்களாகவும் கண்காட்சி கூடங்களில் சிறப்பு பெற்று மிளிர்கின்றன.

ஓவியனும் அவன் ஓவியங்களும் காலத்தால் அழியாதவை அதே போல திரு ராஜன் அவர்களும் ஒருவரை பார்த்து எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவர்.

இவரின் திறமைகளை மாருதம் இணையத்தளமூடாக உலகின் பார்வைக்கு கொண்டு செல்வதில் மிக்க மகிழ்வே.

இவர் போன்ற கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து உலகளாவிய ரீதியில் இவர்களுக்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பது தமிழ் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருடைய தார்மீக கடமையாகும்.


No comments

Powered by Blogger.