வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்

வவுனியா நகரசபையினை தமிழர் விடுதலைக்கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது.

வவுனியா நகரசபையின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று (16) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்புக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இ.கௌதமனுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒருவாக்குமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்று இ.கௌதம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க.சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு.குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.

இவர்களில் க.சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு.குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிலையில் அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்தமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post