இலங்கையின் ஆட்சியாளராக மாறிய கதிர்காம கந்தன்! அமைச்சு பதவி கேட்கும் அரசியல்வாதிகள்!

சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள பலர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு அமைச்சு பதவி கிடைக்க கதிர்காம கந்தனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கான விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியாக இருக்கும் கந்தனையும் இலங்கை அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

புத்தாண்டு விடுமுறை தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்காமத்தில் பூஜை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் கோயிலின் பின் பக்க கதவின் ஊடாக நுழைந்து தங்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவி கிடைக்க வழி செய்யுமாறு ஆலயத்தின் பூசாரியிடம் கோரியதாக தகவல் வெளியாகி உள்ளன.

No comments

Powered by Blogger.