கல்முனை நகரில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறுபொதுமக்கள் கோரிக்கை!!

                                                                                            - செ.துஜியந்தன் -
கல்முனை மாநகரில் காலை, மாலை வேளைகளில் பிரதான வீதியில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கல்முனை நகரின் மத்தியிலே பட்டப்பகலில் கட்டாக்காலி மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பிரதான வீதியில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்குள்ளாவதுடன். வாகனங்களில் பயணிப்போர் விபத்துகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.

கல்முனையில் நடக்கும் வீதி விபத்துக்களில் இக் கட்டாக்காலி மாடுகளினாலும்
அதிகமான விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக கல்முனையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொதுச்சந்தை, நகரின் கடைத்தொகுதிகள் அமைந்துள்ள மத்திய பகுதிகள், பஸ்தரிப்பு நிலையம், வங்கிகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் இம் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும் அவை முறையாக அமுல்படுத்தப்படவில்லை.
 
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.