மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.?

இலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது.
பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேவேளை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு பெப்ரவரி மாதம் 58154 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயம் தந்துள்ளனர்.
தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு கிடைத்துள்ளது.
அதேசமயம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. 

No comments

Powered by Blogger.