சயிட்டத்திற்கு எதிராக மீளவும் போராட்டம் ?சயிட்டம் எனப்படும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மீளவும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வாக்குறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படவில்லை என ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

சயிட்டத்திற்கு எதிராக நாளை மாணவர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதாக உறுதியளித்து, அதனை கொதலாவல பாதுகாப்பு கல்லூரியுடன் இணைத்து தனியார் மருத்துவ கல்லூரியை சட்ட ரீதியாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழகத்திற்கு எதிரில் போராட்டங்களையும், தௌவூட்டல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.