பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் புதிய அப்டேட்!

'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் பிரபாஸ் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகிக்கொண்டிருக்கும் `சாஹோ' படத்தின் எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியுள்ளது. சென்ற வருடம் இதே சமயத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. ஹாலிவுட் ஸ்டைலில் இருந்த டீசர், இதுவரை 15 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது. 


சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை சுஜித் ரெட்டி இயக்குகிறார். ஷ்ரதா கபூர், நீல் நித்தின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி என எராளமானோர் படத்தில் நடிக்கின்றனர். `விஸ்வரூபம்' படத்திற்கு இசையமைத்த சங்கர்-இஷான்-லாய் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இதைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை, வரும் ஏப்ரல் 10 அன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். பல ஹாலிவுட் படங்களிலும், ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் `2.0' படத்திலும் சண்டைப் பயிற்சியாளராக வேலை செய்த கென்னி பேட்ஸ்தான் இந்தப் படத்திற்கும் சண்டைப் பயிற்சியாளர். பிரபாஸ் மட்டுமில்லாமல் ஷ்ரதா கபூரும் ஆக்‌ஷன் சீக்குவன்ஸில் களமிறங்க இருக்கிறார். 

பல கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டத்தோடு உருவாகிக்கொண்டிருக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

No comments

Powered by Blogger.