இந்திய பாதுகாப்புத்துறையின் இணையதளத்தை முடக்கிய ஹாக்கர்கள்!!

இந்திய பாதுகாப்புத்துறையின் இணையதளம் ஹாக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.


தற்போது இணையதளங்களின் பாதுகாப்பு மிகக் குறைவாகவே உள்ளது அடிக்கடி ஹாக்கிங் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே வருகின்றன. இது மட்டுமல்லாது ஒரு புறம் நாம் சமூக வலைதளங்கள் என நினைக்கும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களே நமது தகவல்களைத் திருடிக்கொண்டிருக்கின்றன. 

இந்த வகையில் இந்திய பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் சில மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் மேலே சீன வார்த்தையில் ஏதோ குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாக் செய்தவுடன் அடுத்த சிறிது நேரத்திலேயே இந்தப் பக்கம் மீண்டும் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஹாக்கர்ஸ் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைசர் நிர்மலா சீதாராமன், “இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மிகவும் துரிதமாக இணையதளம் சரிசெய்யப்பட்டுவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இதே போன்று ஏர் இந்தியாவில் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஹாக்கர்களால் முடக்கப்பட்டு அதில் “இனி, நாம் அனைவரும் துருக்கி ஏர்லைன்ஸில் பயணிப்போம்” என்று பதிவிடப்பட்டிருந்தது.இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.