மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பிரிவுக்கான தமிழ்மொழித்தினப் போட்டி நடைபெற்றது.

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பிரிவுக்கான தமிழ்மொழிதினப் போட்டி சனிக்கிழமை(28.4.2018) காலை 9.00மணியளவில் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் மண்முனை வடக்கு கோட்டகல்விப்பணிப்பாளர் கே.அருட்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.தமிழ் கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் தமிழ்மொழிதினம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,தேசிய கல்விநிறுவனத்தின் முன்னாள் தமிழ்துறைப்பணிப்பாளர் செல்வி.வ.விஜயலெட்சுமி, முன்னாள் வடகிழக்கு கலாச்சாரப்பணிப்பாளர் செ.எதிர்மன்னசிங்கம்,பிரதிக்கல்வி பணிப்பாளர் ரீ.உதயாகரன்,முன்னாள் மண்முனைவடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர்களான டீ.யுவராஜன்(தமிழ்),ஆர்.ஜே.பிரபாகரன்,அதிபர்களான திருமதி திலகவதி ஹரிதாஸ்,பயஸ் ஆனந்தராசா,இ.பாஸ்கர்,ரீ.அருமைத்துரை,ந.சந்திரகுமார்,ஏ.விஜயகுமார், உட்பட பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது ஆக்கம் தவிர்ந்த நிகழ்ச்சிகளான பேச்சு,பாவோதல்,வில்லுப்பாட்டு,நடனம்,மேடைநாடகம்,வாசிப்புக்கள் உட்பட 32 போட்டிகள் நடைபெற்றது.எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றீதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.No comments

Powered by Blogger.