வர்த்தக நிலையங்களின் முறைகேடுகள் தொடர்பாக தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதும் 1800 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வர்த்தக நிலையங்கள் தொடர்பில் முறைபாடுகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

011 2 635 675 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைபாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 070 2703737 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.