மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பிரதிமேயராக தமிழரை தெரிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நற்பிட்டிமுனையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

கல்முனை மாநகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல் தமிழருக்கு ஏன் வழங்கினாய் எமது மக்கள் காத்தமுத்து காங்கிரஸின் அடிமைகளா என பிரதியமைச்சர் எச் எம் எம் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று (6) ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.

பிறைக்கொடியா புலிக்கொடியா என்றவாசகமும் பொறிக்கப்பட்ட சுலோக அட்டையை ஆர்ப்பாட்க்காரர்கள் ஏந்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்ததது.


No comments

Powered by Blogger.