விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்!!

விசாக நோன்மதி காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பு நகருக்கான பாதுகாப்பு கடமைகளில் 3 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாநகரில் 11 வெசாக் அலங்கார பந்தல்களும், ஐந்து வலயங்களும் அமைக்கப்படவுள்ளன. 

இவற்றை பார்வையிட வரும் மக்களின் நலன்கருதி சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயிரத்து 900 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். 

மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஆயிரத்து 100 பேர் பணியாற்றுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.