மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மாணவி டெங்கினால் உயிரிழப்பு!

                                                                                   - க.விஜயரெத்தினம் -
காத்தான்குடி பொலீஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்தவரும்,வின்சன்ட் உயர்தர பெண்கள்பாடசாலையின் மாணவியுமான செல்வி சபாநாதன்-ஜதுர்ஸ்ரிக்கா டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 27/04/2018 திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வின்சன்ற் உயர்தர மாணவி அமரர் சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா (வயது-17) விடுதி 1இல் சிகிச்சை பலனின்றி இன்று (30/04/2018)உயிரிழந்துள்ளார்.இவ்வாறு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர் பொதுச்சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார்.

No comments

Powered by Blogger.