மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


WhatsApp-ன் புதிய வசதி: என்ன தெரியுமா?


ஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும்.

சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போன் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஒரு ஃபைல்களை டவுன்லோடு செய்யவில்லை என்றால் அது 30 நாட்களுக்குள் சர்வர் சேவையகத்திலிருந்து தானாகவே அழிக்கப்பட்டுவிடும்.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் டவுன்லோடு செய்யாத ஃபைல்கள் மட்டும் அல்லாமல் நம் கைப்பேசியில் நாம் அழித்து விட்ட ஃபைல்களையும் நாம் வாட்ஸ் ஆப்பில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஊடக கோப்புகள் பதிவிறக்கம் செய்யாவிட்டால், அவை 30 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன, பின்னர் பயனர் அவற்றை பதிவிறக்க முடியவில்லையெனில் சேவையகத்திலிருந்து நீக்கப்படும்.

பயனரின் ஃபோன் சேமிப்பிலிருந்து பயனர் நீக்கப்பட்டிருந்தாலும், புதிய அம்சத்துடன், பயனர்கள் இந்த மீடியா கோப்புகளை நீண்ட காலத்திற்கு மீண்டும் பதிவிறக்க அனுமதிக்கும்.

இந்த புதிய முறை 2.18.113 எனும் ஆன்ராய்ட் பதிப்பில் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.