எதிர்வரும் 17ம் திகதி அரச வைத்தியர்கள் வேலை நிறுத்தம்!!

பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 17ம் திகதி பரந்தளவிலான ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த சங்கம் இதனைத் தெரிவித்தது. 

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்தும், எட்கா உடன்படிக்கையை தன்னிச்சையான முறையில் தொடர்வதை எதிர்த்தும் அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

இது சம்பந்தமாக நேற்று கூடிய அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.