மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு!!

2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட 91 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது. 

இவர்களுள் 31 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்ட பணிப்பாளர், விசேட வைத்தியர் திலானி ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். 

தாயின் மூலமாக குழந்தைக்கு எச்.ஐ.வி யின் தாக்கம் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வைத்தியர் திலானி ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். 

இதனால் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு தவிர்க்கப்பட்ட நாடாக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
கடந்த வருடத்தின் இந்தக் காலப்பகுதியில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.