கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்!!

                                                                                                 - ஏகலைவன் -
கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த கர்பிணித் தாய் ஒருவருக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு குழந்தை ஆபத்தின்றி வெளியேற்றப்பட்டது.தாய் இன்று மரணித்துள்ளார்!

இருந்தும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று மரணத்தை தழுவியுள்ளார் இதன் காரணமாக மரணித்த பெண்ணின் உறவினர்கள் ஊர்மக்கள் வைத்தியசாலையின் முன்கூடி வைத்தியர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் தகவல் அறிந்த மாருதம் செய்தியாளர் குறித்த வைத்தியசாலைக்கு விரைத்து தகவல்களை வீடியோ ஆதாரமாக எமது செய்தித் தளத்தில் பதிவிட்டார்.

பின்னர் குறிப்பிட்ட மகப்பேற்று வைத்திய நிபுணர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது.....
சம்பவம் நடந்த அன்று குறிப்பிட்ட பெண்ணிற்கு நான்கு மகப்பேற்று நிபுணர்கள் ஒன்று கூடியே மிகுந்த அவதானத்துடன் சத்திர சிகிச்சையினை மேற் கொண்டதாகவும் குழந்தையின் தலைப் பகுதி வெளியே வராதவாறு கருப்பையினுள் மிகவும் சிக்கலான நிலையில் வெளியே எடுக்கமுடியாதவாறு காணப்பட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்தை விட அதிமான நேரம் தேவையேற்பட்டதால் குறித்த கர்ப்பிணிப் பெண் வைத்தியர்களின் சிகிச்சைக்கு ஒத்துழையாமல் உடல் அசைவுகளை ஏற்படுத்தி மிகுந்த சிரமத்தினை உண்டு பண்ணி வைத்தியர்களின் சிகிச்சைக்கு இடையூறு விளைவித்ததாகவும் இருந்தும் வைத்தியர்கள் தாயையும் சேயையும் காப்பாற்ற மிகுந்த பிரயத்தனம் செய்து சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

ஆனால் குறித்த பெண்ணிற்கு சத்திர சிகிச்சைக்கான நேரம் கூடுதலாக தேவைப் பட்டது முதல் காரணமாகவும் இரண்டாவது வைத்திய நிபுணர்களின் வைத்தியத்திற்கு அவரால் ஒத்துப் போகமுடியாமல் ஏற்படுத்திய கால தாமதத்தாலும் முன்றாவதாக கூடிய இரத்தப் போக்கு அதை ஈடு செய்ய பாய்ச்சப்பட்ட இரத்தம் உடலில் நிறைவானதாக இருக்க பெண்ணின் ஒத்துழையாமை இவற்றின் காரணமாக இதயம் பலவீனமுற்று இன்று மரணத்தை தழுவியதாகவும் குறிப்பிட்ட வைத்திய நிபுணரின் அறிக்கை அமைகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசாரும் இதற்கென அமைக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவும் இணைந்து நிகழ்ந்த மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.