கிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்!!

                                                                         - கோகுலதாஸ் சதாசிவம்-
மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் செல்வன் சதானந்தம் அஜந்தன் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேசப் ஆங்கில மொழிமூலமான கனிதப் போட்டியில் (International Maths Quiz Competition ) பங்குபெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திரு.துரை சபேசன் அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச கணித அறிவுப் போட்டியை முன்னிட்டு கடந்த 10.05.2018 அன்று மட்.தெரேசா மகளீர் பாடசாலையில் இப்போட்டிப் பரீட்சை நடைபெற்றது. 

தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டிப் பரீட்சையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சதசானந்தம் அஜந்தன் என்ற மாணவனே இவ்வாறு இப்பரீட்சையின் மூலம் வெற்றிபெற்று சிங்கப்பூர் செல்லவதற்கு தெரிவாகியுள்ளார்.

எவ்வித அடிப்படை வசதிகளோ பிரத்தியேக வகுப்புக்களோ இல்லாமல் கிராமப்புற பாடசாலையொன்றிலிருந்து தனது சுய முயற்சியிலும் திரு.பே.யோகேஸ்வரன் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலும், பெற்றோர், பாடசாலை சமூகத்தினரின் ஊக்கப்படுத்தலின் உத்வேகமுமே இவரை இவ் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளது. 

இது தவிர அண்மயில் இடம்பெற்ற ஒலிம்பியட் கணித வினாவிடை போட்டியில் வலய மட்டத்தில் முதலாமிடத்தில் தேர்வாகி தேசியரீதியில் இடம்பெற்ற போட்டியிலும் இம் மாணவன் பங்குபற்றினார் என்பதும் குறிப்பிடதக்கவிடயமாகும்.

எவ்வாறெனினும் இவர் சிங்கபூர் செல்வதற்கான வாய்ப்பை பெற்றிருந்தாலும் அதற்கான பொருளாதார பின்புலம் இன்மையால் சர்வதேச போட்டிக்கு தனது மகனை அனுப்ப முடியாதுள்ளதாக அன்றாட கூலிவேலைக்கு சென்று வருமானமீட்டி குடும்பத்தை பராமரித்துவரும் இம் மாணவனின் தந்தை திரு.சதானந்தம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.