கடும் வரட்சியினால் தீக்கிரையாக்கப்பட்ட காட்டுப்பகுதி!!


புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை மாற்றத்தினால் வனப்பகுதிகளில் தீப்பரவல்கள் இடம்பெற்று வருகின்றன. 

குறிப்பாக பெரும் காட்டுப்பகுதிளாக காணப்படும் இடங்களில் இந்த தீப்பரவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று (03) புதுக்குடியிருப்பிற்கும், மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் திடீரென தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தீயினை பரவவிடாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.