மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மட்டு நகரில் "தமிழ் ஓசை" இலவச வினியோகம்!!

                                                                                                          - சுதாமன் -
மட்டக்களப்பு மா நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை  27/05/2018 மாதாந்த வெளியீடாக தொடர்ந்து வெளி வரும் பத்திரிகையான தமிழ் ஓசை  ஆறாவது மாத ஓசை இலவசமாக மக்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் பல காலங்களாக கிழக்குக்கென ஒரு தனித்துவமான மக்களின் பத்திரிகை வெளி வராத காரணத்தினை கருத்தில் கொண்டு தனி நபரால் எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் வெளிவருகிறது; இப்பத்திரிகையினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகமாக சிரேஸ்ட ஊடகவிலாளர் மற்றும் மட்டு மா நகர சபை உறுப்பினருமான சிவம் பாக்கிய நாதன் அவர்களினால் வைபவ ரீதியாக பொதுச் சந்தை மற்றும் அருகாமை வர்த்தக நிலையங்களுக்கும் அப் பகுதிக்கு வருகை தந்த மக்களுக்கும் வழங்கி வைக்கப் பட்டதுடன் தமிழ் ஓசை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு தனி நபரின் அதீத முயற்சிக்கு ஒத்துழைப்பினை நல்குவதற்கு தன்னலமற்ற சேவை மனப்பாங்குள்ள ஊடகவியலாளர்கள் முன் வந்து மக்கள் குறைகளை அவர்கள் அவலங்களை இப் பத்திரிகை வாயிலாக வெளிக் கொணர வேண்டுமென்பதே அனைவரின் அவா; அதே போல பல ஊடகங்கள் இந்த பத்திரிகை வெளியீடு மற்றும் வரவு பற்றிய தகவல்களை இன்னமும் வெளியிடாமல் இருப்பதன் மர்மமென்ன; ஏன் இது அரசியலுக்கோ அரசியல் வாதிகளுக்கோ துணை போகாத பத்திரிகை என்பதாலா இல்லை செய்திகள் அனுப்புவதற்கு மற்றைய ஊடகங்கள் போன்று பணம் தராமையினாலா  அல்லது மட்டு ஊடகவியலாளர்கள் பணத்திற்கும் பதவிக்கும் அரசியலுக்கும் துணை போய் விட்டார்களா எனும் பல சந்தேகங்களை உண்டு பண்ணுகிறது.

எனவே இந்த தனி மனித முயற்சிக்கு அனைத்து ஊடகங்கள் மற்றும் அரசு சார்ந்த சாராத ஊழியர்கள் அதிகாரிகள் பொது மக்கள் ஊடக தர்மத்தினை நிலை நாட்டும் ஊடகவியலாளர்கள் பதவிமோகம் பண மோகம் விட்டெறிந்து நிறைந்த ஒத்தாசையினை நல்கி கிழக்கின் மக்கள் நலனுக்காக இப்பத்திரிகையினை துணையாக்கி அனைவரின் ஆதங்களையும் குறை நிறைகளையும் அரசுக்கு தெரிவித்து உலக அரங்கிலே நமது கலை கலாச்சாரம் பண்பாட்டினை மேலோங்க செய்து வாசிப்பு திறனை அதிகரித்து கல்வி அடைவு மட்டத்தினையும் அதிகரிக்கச் செய்து ஊழலற்ற கிழக்காக மிளிரச் செய்வது அனைவரினதும் தலையாய கடமையாகும்.No comments

Powered by Blogger.